மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு ! நிர்மலாதேவிக்கு 2வது முறையாக பிடிவாரண்ட் உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம்.

நிர்மலா தேவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர்.கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி மீது கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்,அவருடன் முருகன்,கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி நிர்மலா தேவி ஆஜராக உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆஜராகவில்லை.இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்திய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாத நிலையில் 2வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.