#BREAKING : வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு..!

#BREAKING : வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு..!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில்,  வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தை எதிர்த்து தென் நாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவில் 20% இட ஒதுக்கீட்டில் 68 சாதிகளை கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5% தான் கொடுக்கிறார்கள். எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கப்படுகிறது. ஆனால், 7 பிரிவுகளை கொண்ட வன்னியர்களுக்கு எவ்வாறு 10.5% ஒதுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்காலிக சட்டத்தின் அடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் நாடு மக்கள் கட்சி தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube