கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் – ஒன்றை வயது குழந்தை பலி!

திருப்பத்தூரில் கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டரால் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.
ஆம்பூரை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதிகளின் ஒன்றரை வயது குழந்தை தான் அனன்யா. பவித்ரா  தனது தாய் வீட்டுக்கு சென்று குழந்தையுடன் இரண்டு நாள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரப்பி வாட்டர் ஹீட்டர் வைத்து சென்றுள்ளார் பவித்ரா. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாட்டாக நினைத்து தண்ணீரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
குடம் கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பவித்ரா குழந்தை மயங்கி கிடந்தது கண்டு கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் வாட்டர் ஹீட்டர் மற்றும் மின்சாதன பொருட்களை மிகவும் கவனமாக குழந்தைகள் தொட முடியாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை.
author avatar
Rebekal