இனி பணம் எடுக்க கட்டுப்பாடு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்ட டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கியில் புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்ய தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது.

மேலும், வங்கியின் தற்போதைய பண நிலையைப் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து 1000-க்கு மேல் திரும்பப் பெற முடியாது. இது அனைத்து கணக்கு வைத்து இருபவர்களும் பொருந்தும்.

இது ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு புதிய முதலீடும் அல்லது புதிய பொறுப்பையும் முன் ஒப்புதல் இல்லாமல் எடுக்க கூட்டுறவு வங்கிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. நிதி நிலைமை மீண்டு வரும் வரை வங்கி முன்பு போலவே இயங்கும். இந்த அறிவுறுத்தல்கள் நேற்று மாலை முதல் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நோக்கத்திற்காக டெக்கான் நகர கூட்டுறவு வங்கி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்குப் பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உறுதி வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள சுதந்திர கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் இருந்து ரிசர்வ் வங்கி பணம் எடுக்க நிபந்தனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan