NEET, JEE தேர்வுகள் ரத்து.. நாளைக்குள் பரிந்துரை வழங்கவேண்டும்- மனிதவள மேம்பாட்டுத்துறை!

நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்கவேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், சில பல்கலைகலைக்களங்களிழும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல தரப்பின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன்காரணமாக தற்பொழுதுள்ள சூழலில் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிடம் தேர்வுகள் குறித்து பரிந்துரை கேட்கப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் பரிந்துரை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.