கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கனடா அரசு இந்திய மதிப்பில் ரூ.5,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் இதுவரை 91 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள ஒரு பில்லியன் கனடா டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்