எனது கல்லீரல் இரும்பால் செய்யப்பட்டதா, மது அருந்திய குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மது அருந்துவதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. தனக்கும் தன் அரசாங்கத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தவும் எதிர்க் காட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பல சந்தர்ப்பங்களில் குடிப்பழக்க குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில், அவர் குடிப்பழக்கத்திற்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் முடிவுகள் கூட எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார். கடந்த 12 ஆண்டுகளாக தான் மது அருந்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், நாடாளுமன்றத்திலும் குருத்வாராவிலும் மான் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களாக இரவும் பகலும் மது அருந்தினால் ஒருவர் உயிருடன் இருக்க முடியுமா? அப்படியானால் எனது கல்லீரல் இரும்பினால் ஆனதா என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.