8 வடிவில் நடக்கலாமா ? மருத்துவர்கள் கூறும் அறிவுரையைக் கேளுங்கள்!

8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது.

நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது.

கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர்.

இதுகுறித்து எலும்பு மூட்டு மருத்துவர்கள் கூறும் கருத்துகள் பின்வருமாறு , “சாதாரணமான நடைப்பயிற்சியே போதுமானது. 8 வடிவில் நடப்பது மூலமாக கால் மூட்டு மற்றும் தசை நார்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கால்மூட்டு எலும்புகளுக்கு தேவையில்லாத சிக்கல் உருவாக்குகிறது .

இதேபோல் வயதானவர்களிடம், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதன் மூலம் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என சொல்வதும் லிப்ட் போன்ற வசதிகளை தவிர்க்க சொல்வதும் அவசியமற்றது.

இல்லத்தரசிகள் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்யும் போது அடிக்கடி கால்மூட்டுகளை நீட்டியும் மடக்கியும் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு நாற்காலியோ அல்லது வேறு ஏதேனும் மாற்றுவழிகளையோ பயன்படுத்தலாம்.

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, கால்சியம் சத்துள்ள உணவை உட்கொள்வது, மேலும் போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்தாலே, குறிப்பிட்ட வயதிற்கு பின் வரும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

author avatar
Aravinth Paraman

Leave a Comment