ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் ஆதார் விபரம் இல்லாத காரணத்தால், சிறுவனை கண்டறிய முடியவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு  புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆதார் விபரங்களை தனி நபர்களுக்குத்தான் வழங்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube