ஆளுநர் தமிழகத்தை 3-ஆக பிரித்தால் ஏற்க முடியுமா..? – உமர் அப்துல்லா

முதல்வர் மு.க.ஸ்டாலினினுக்கு, உமர் அப்துல்லா  பிறந்தநாள் பரிசாக ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்பை பரிசாக வழங்கியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஸ்டாலினின் உழைப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவிக்கிறார் ஸ்டாலின். எந்த மதமாக இருந்தாலும், உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.

ஆளுநர் தமிழகத்தை 3-ஆக பிரிக்க முடியுமா? என ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் கேள்வி எழுப்பினார்.  ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பது தான் இந்தியாவின் சிறப்பு. காஷ்மீருக்காக தமிழக குரல் கொடுத்தது. அதற்காகவே நான் இங்கு நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினினுக்கு, உமர் அப்துல்லா  பிறந்தநாள் பரிசாக ஜம்மு – காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்பை பரிசாக வழங்கியுள்ளார்.