பீன்ஸ் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்குமா….?

பீன்ஸ் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்குமா….?

beans

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளில் பீன்சும் ஒன்று. இது நமது அருமையை உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அழிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.

சத்துக்கள் :

பீன்ஸில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பீன்ஸில் கலோரி குறைவாக உள்ளதால் இது எளிதில் செரிமானமாகும் ஆற்றல் கொண்டது. 100 கிராம் பீன்ஸில் நார்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறக் சுவர்களை பாதுகாத்து நச்சு தன்மைகளை வெளியேற்று தன்மை கொண்டது. மேலும் இது புற்று நோய் செல்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டது.

பீன்ஸில் உள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ற்றாளைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. பீன்ஸில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையும். பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் :

பீன்ஸில் உள்ள வைட்டமின் பி 12 கருவுற்ற பெண்களுக்கு கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. பீன்ஸில் வைட்டமின் சி, தையமின் மற்றும் வைட்டமின் b6 இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை  கொடுக்கிறது.

இரத்த அழுத்தம் :

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்ததை குறைக்கிறது.

வாய்புண் :

பீன்ஸை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பருகி வந்தால் வாய்புண், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் ஆறும். நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்சின் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களை கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

செரிமான சக்தி :

பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை போக்கும். பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்த குழாய் அடைப்புகளை போக்குகிறது மற்றும் இத்தா அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நீரிழிவு நோய் :

நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். மேலும், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீன்ஸ் சிறந்த உணவாகும்.

 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *