இப்படி கூட மேகி செய்து சாப்பிடலாமா…?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம். 

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. இந்த மேகியை பலவிதமான முறைகளில் பலரும் செய்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மேகி – 2 பாக்கெட்
  • முட்டை – 2
  • காரட், பீன்ஸ், வெங்காயம் தாள், காலிபிளவர், பட்டாணி – 1 கப்
  • டேஸ்ட் மேக்கர் – 2 பாக்கெட்
  • வெள்ளை பூண்டு – 7 பல் வெங்காயம் – 2
  • எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கொதிக்கும் நீரில் மேகியை போட்டு, எடுத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி, பின் அதனுடன் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதனுடன் காய்கறிகளை சேர்த்து, உப்பு போட்டு வதக்க வேண்டும். பின் மேகியை சேர்த்து, டேஸ்ட் மேக்கரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான மேகி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.