ரயில் என்ஜின்களில் கேமரா அமைக்கலாமா..? உயர்நீதிமன்றம் யோசனை

யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் நவீன கேமராக்கள் அமைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாக  தெரிவித்தார். அப்போது நீதிபதி யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டு பலியாவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும் யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் நவீன கேமராக்கள் அமைக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

author avatar
murugan