கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவு..!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது. 

கர்நாடகா மாநிலத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், அனைத்து கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் இருந்த பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா, ஆகியோர் பாஜக சார்பில் தீவீர பிரச்சாரம் செய்தனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளியோர் காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் முடிவடைந்தது.

மேலும், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10- தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  மொத்தம் 224 தொகுதிகளில் கொண்ட இந்தத் தீர்த்தத்தில்  2,615 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.