தர்பார் திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது!

லோக்கல் சேனலில் ஒளிபரப்பான தர்பார்.  லைகா நிறுவனத்தின் புகாரையடுத்து

By leena | Published: Jan 14, 2020 04:51 PM

  • லோக்கல் சேனலில் ஒளிபரப்பான தர்பார். 
  • லைகா நிறுவனத்தின் புகாரையடுத்து சரண்யா கேபிள் டிவி உரிமையாளர் கைது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்  அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். 9- ம் தேதி வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தர்பார் படத்தை மதுரை அருகே இயங்கும், சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் நிறுவனம்  சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனத்தின் புகாரையடுத்து, சரண்யா டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc