டில்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு என தகவல்…. இதை டில்லி காவல்துறை மறுப்பு..

டில்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு என தகவல்…. இதை டில்லி காவல்துறை மறுப்பு..

தலைநகர் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில்,  காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 11 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும்  செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் சிலரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த சூழ்நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர டில்லி காவல்துறை கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் தில்லியில் வன்முறை அதிகரித்து வரும் சில பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி யமுனா விஹார் உள்ளிட்ட வன்முறை பரவிவரும் சில பகுதிகளில் வமுறையாளர்களை கண்டதும் சுட்டுமாறு டில்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவல்களை உண்மையில்லை என்று தில்லி காவல்துறை மறுத்துள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube