சென்னையில் பஸ், ரயில் இயக்க கூடாது.! வயதானவர்களை பாதுகாக்க வேண்டும்.!

சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை

By balakaliyamoorthy | Published: May 30, 2020 03:14 PM

சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீடிப்பதா? இல்லை தளர்வு செய்யலாமா? என்பதை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் 4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம் என்று தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். வழிப்பாட்டு தளங்களை திறக்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு நீடித்தால் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தான் தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா சமூக பரவல் இல்லை. கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc