பரபரப்பு: பஸ் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஆபாச வீடியோ..!

பரபரப்பு: பஸ் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஆபாச வீடியோ..!

மத்திய பிரதேசத்தில் உள்ள தலைநகர் போபால் அருகே உள்ள வித்யாநகர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிக்கெட் வழங்குவதற்காக நவீன இயந்திரம் உள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி இந்த இயந்திரத்தில் திரையில் திடீரென 30 விநாடிகள் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி  உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தத வீடியோ காட்டு தீ போல மத்திய பிரதேசம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில்போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த எந்திரத்தின் பாஸ்வேர்டு  மாற்றவில்லை.இதை தெரிந்து கொண்ட யாரோ ஒருவர் தான் இது போன்றவீடீயோவை பதிவிட்டு இருக்கிறாரார்கள் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

author avatar
murugan
Join our channel google news Youtube