பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

bus falls from a bridge in Khargone
bus falls from a bridge in Khargone [Image Source : Twitter/@ANI]

மத்திய பிரதேசம் கர்கோனில் பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு.

மத்திய பிரதேசம் கர்கோன் பகுதியில், பேருந்து ஒன்று மேம்பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் இன்று ஆற்றின் பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச கார்கோனில் பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. 20 முதல் 25 பேர் காயமடைந்து கார்கோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 11 பேர் இந்தூர் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது.