“டிக்கிலோனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று.!

இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ரும், நாளை மறுநாள் மூன்றாவது போஸ்ட்ரும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நகைச்சுவையின் மன்னராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான், காமெடி ஆக்டரான சந்தானம்.காமெடி ஆக்டராக அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக வந்து சினிமா துறையில் கலக்கி வருகிறார்.இந்தநிலையில் இந்த வருடம் இவரது நடிப்பில் 6 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்து வெளியாகும் நிலைமையில் இருந்த சர்வர் சுந்தரம் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது அந்த சிக்கல்களை எல்லாம் மாற்றி விரைவில் படத்தை வெளியிட தீவிர வேலைகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, சந்தானம் கதாநாயகனாக தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இவை அனைத்துமே இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் சந்தானத்தின் 6 படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ரும், நாளை மறுநாள் மூன்றாவது போஸ்ட்ரும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சந்தானம் ரசிகர்ளுக்கு  பெரிய விருந்தாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.