#BureviCyclone : புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் – ஆர்.பி.உதயகுமார்

#BureviCyclone : புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் – ஆர்.பி.உதயகுமார்

அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது, இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என்றும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுள்ள நிலையில், இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், நிவர் புயலின் போது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தது  போல, இந்த புயலின் போதும் மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு, அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் என்றும், புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube