11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புரேவி புயல்.!

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

வாங்க கடலில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், 24 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது.

தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு தென்கிழக்கில் 500 கிமீ, கன்னியாகுமரிக்கு 900 கிமீ தொலைவில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதனால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதித கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.