#Burevi Cyclone : இந்த மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

புரவி புயல் எதிரொலியால் இந்த மாவட்டங்களில் எல்லாம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும் நாளையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, புதுவை  காரைக்கால், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.