#Budget Live : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் முழு விவரங்கள்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது.

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,

ஜிஎஸ்டி :

  • ஜிஎஸ்டி மூலமாக 16 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்துகின்றனர்.மொத்தமாக 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.

விவசாயம் :

  • விவசாய துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு ரூ .15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
  • விவாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 20222-ம் ஆண்டுக்குள் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு
  • வேளாண் உற்பத்திப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்

கிசான் ரயில் அறிமுகப்படுத்தப்படும்:

  • பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்

கிருஷி உடான் :

  • விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.

பால் :

  • 2021-ம் ஆண்டில் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம் :

  • 112 மாவட்டங்களில்  “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள் வழக்கப்படும் 

தூய்மை இந்தியா :

  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு 20-21-ம் ஆண்டு ரூ.12,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழில் துறை :

  • முதலீட்டாளர் சிரமமின்றி இந்தியாவில் தொழில் தொடங்க முதலீட்டுக்கு அனுமதி தரும் சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.
  • தொழில் முனைவோர் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலம். அவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். 
  • தொழில் மட்டும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ. 27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் .

ரயில்வே துறை :

  •  27 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை மின்மயமாக்கப்படும் 
  • டெல்லி- மும்பை அதிவிரைவு சாலை 2013-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை :

  • புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்  
  • கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கவும் திட்டம் 
  • வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள் திட்டம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.

மின்துறை :

  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்க எரிசக்தி துறைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரத் நெட் திட்டம் :

  • பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் .பாரத் நெட் மூலம் தபால் நிலையங்கள் , மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பள்ளிகள் இணைக்கப்படும்.

சமையல் எரிவாயு திட்டம் :

  • குழாய் வெளியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.கூடுதலாக 16,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு சமையல் எரிவாயு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மனிதக் கழிவை அகற்ற புதிய தொழில்நுட்பம் :

  • மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 

அருங்காட்சியம் அமைக்க முடிவு :

  • சுற்றுலா துறையின் கீழ் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர் நலத்துறை :

  • தாழ்த்தப்பட்டோர் ,இதர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூபாய் ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பழங்குடியினர் நலனுக்காக ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் தொடர்புடைய திட்டம் :

  • மூத்த குடிமக்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு 9,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுச்சூழல் துறை :

  • சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுத்தும் அனல் மின்நிலையங்கள் மூடப்படும்.
  • மக்கள் தொகை 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசை குறைக்க ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜி20 மாநாட்டுக்கு ரூ.100 கோடி:

2022 ஆம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படும், மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வருமான வரி குறைப்பு :

  • ஆண்டுக்கு, ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10% வருமான வரி செலுத்தினால் போதும்.
  •  ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 % வரி செலுத்தினால் போதும்,
  • ரூ. 10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 20 %  வரி செலுத்தினால் போதும்.
  • ரூ.12.15 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் 25 %  வரி செலுத்தினால் போதும்.
  • 15 லட்சத்திற்கு மேல் வருவாய்  ஈட்டுவோர் 30 %  வரி செலுத்தினால் போதும்.
  • ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை