பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் – இன்று அல்வா வழங்கும் நிகழ்ச்சி.!

மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜன. 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது.

சமீபத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இம்மாதம் 29-ஆம் தேதி கூட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விநியோகித்தார்.

பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்