கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மைத்துனர்.!

நடிகர் விவேக் அவர்களின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

By ragi | Published: Jul 13, 2020 05:27 PM

நடிகர் விவேக் அவர்களின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, 10 நாட்களில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும்,அவரது உறவினர்கள் முதல் அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகரான விவேக் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த மைத்துனர் 10நாட்களில் குணமடைந்து வீடு திரும்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் எனது மைத்துனர் கொரோனாவால் காய்ச்சல், மூச்சு திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி என்று விவேக் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc