நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாளான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு திருவுருவ  நாவலர் உருவச்சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மறைந்த முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

திராவிட இயக்கத்தில் முக்கியமான தலைவர் மட்டுமில்லாமல் திராவிட இயக்க கொள்கைகளை அரசின் கொள்கைகளாக மாற்றியதில் பெரும்பங்கு வகுத்தவர். மேலும் திமுக வளர்வதற்கும், அதிமுக அமைப்பாவதற்கும் உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.