திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள்! காரணம் இதுதான்!

திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள். இந்தியா முழுவதும்

By leena | Published: May 09, 2020 07:30 AM

திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மே-7ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அரசியல் கட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே பல கோடிகளுக்கு மது விற்பனை நடந்துள்ளது. 

இந்நிலையில், திருச்சியில், மதுக்கடைகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களிலேயே கடைகள் வெறிசோடி காணப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்பகுதி மக்கள் தினக் கூலிகள் என்றும், மக்களிடம் பணம் இல்லாத காரணத்தாலும் யாரும் மது வாங்க வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் அடையாள அட்டை கேட்டதால், மதுக்கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc