கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் !அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம்

கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் !அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பிராண்டன் மெக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ்  இருந்தார்.பின் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Image

இதனையடுத்து அணி நிர்வாகம் கடந்த சில நாட்களாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நியூ சிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பிராண்டன் மெக்கலத்தை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக  மெக்கலம்  2008 முதல் 2010 ஆண்டு வரை மற்றும் 2012 முதல் 2013 ஆண்டு வரை விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube