#Breaking:சற்று நேரத்தில் பொதுக்குழு – புறப்பட்டார் ஓபிஎஸ்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனிடையே,பொதுக்குழுவுக்கு தடை மற்றும் கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும், பொதுவாக கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை எனவும்,பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானம் குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.எனவே,அதில் தலையிட முடியாது என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.

ஆனால்,ஒற்றைத் தலைமை தீர்மானத்துக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தடை விதிக்காததை எதிர்த்து,ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை அண்ணா நகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விடிய விடிய விசாரணை நடந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.குறிப்பாக,23 வரைவு தீர்மானங்கள் குறித்து மட்டுமே ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றும்,புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.ஆனால்,”நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி முடிவு செய்யும்.அதிமுகவிற்கு பின்னடைவு என்பது கிடையாது.அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றம் ஏதும் இல்லை” தெரிவித்திருந்தார்.

இதனிடையே,அதிமுக பொதுக்குழு இன்னும் சற்று நேரத்தில் சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் தொடங்கவுள்ள நிலையில்,அதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் ஆதரவாளர்கள் வாகனம் மீது மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் புறப்பட்டுள்ளார்.அவ்வாறு செல்லும் வழியில் தொண்டர்கள் எளிதில் சந்திக்கும் படியாக பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனத்தில் ஓபிஎஸ் புறப்பட்டுள்ளார்.

 

Leave a Comment