#BREAKING: வெற்றி நடைபோடும் தமிழகம் – அதிமுக பரப்புரை!

அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் நாளை முதல் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்குகிறார்.

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில், அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் நாளை முதல் 31-ஆம் தேதி வரை நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரையை தொடங்கவுள்ளார். அம்மா திட்டத்தை விளக்கியும் அதிமுக அரசின் சாதனைகளையும் “ரிப்போர்ட் கார்டு” வடிவில் மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஏற்கனவே, திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பெயரில் மு.க ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்