27 C
Chennai
Monday, October 25, 2021

#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறுக்கிழமைகளில் கோயில்கள் திறப்பா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

வார இறுதி நாட்களில் கோயில்கள் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு முன்னதாக அறிவித்தது.அதன்படி,வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,நாளை முதல் ஆயுத பூஜை,விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளன.இதனால்,பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்ய வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில்,வெள்ளி,சனி,ஞாயிறுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில்  வார கோயில்கள் திறப்பு ,வழிபாட்டு தரிசனத்திற்கு விதித்த தடையை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள்,அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், விஜயதசமியன்று கோயில்கள் திறப்பது தொடர்பாக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More