#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!

#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம் நிலவி வரும் நிலையில்,நேற்று முன்தினம் தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பின்னர்,அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர்.

மேலும்,அவரது மாளிகையின் உள்ளே நுழைய முயற்சியும் செய்த ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை.இதனால்,அங்கிருந்து நேற்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி,தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது.இதனால்,அப்பகுதியில் ஆர்பாட்டக்கரார்கள் குவிந்து வருகின்றனர்.குறிப்பாக,ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட கூடாது என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,மகிந்த ராஜபக்சேவை திருகோணமலைக்கு அழைத்து சென்றது குறித்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே கூறியதாவது:”மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தாக்கப்பட்டதால் அவரை பாதுகாக்கவே திருகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றோம்.இலங்கையில் நிலைமை சீரானதும்,மகிந்த ராஜபக்சே அவர் விரும்பும் இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,இலங்கை மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,தற்போது அதற்கு இலங்கை ராணுவத் தளபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும்,பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

Join our channel google news Youtube