#Breaking:படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?; நடிகர் எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய – நீதிபதி மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த  2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,நடிகர் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,”கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாகத் தனது கட்சிக்காரருக்கு மெசேஜ் அனுப்புபவர் என்பதால்,அந்த செய்தியாக இருக்கும் என்று நினைத்து அவர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ல் எழுதியதை ஃபார்வர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு எனத் தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாகத் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தார்”,என்று தெரிவித்தார்.இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில்,நடிகர் எஸ்.வி சேகர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்தை பகிர்ந்த எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும்,பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்,மேலும்,அவதூறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டல் சரியாகி விடுமா? என்று நீதிபதி நிஷா பானு அவர்கள் கேள்வி எழுப்பி,வழக்கை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு,ஒருவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

Recent Posts

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

25 mins ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

47 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

54 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

9 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago