#BREAKING : ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்..? – உயர்நீதிமன்ற கிளை

#BREAKING : ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்..? – உயர்நீதிமன்ற கிளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி  27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் அமைச்சரவையில் தீர்மானம்  நிறைவேறியுள்ளது.

இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 3 மாத சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளேன். அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ரவிச்சந்திரனுக்கு 2 மாதகால சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube