#BREAKING: கார்த்தி சிதம்பரம் மீதான குற்றசாட்டு என்ன? புதிய வழக்குப்பதிவு செய்த சிபிஐ!

ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணபரிவர்தனையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மும்பையில் தலா 3 இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு இடத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அளிக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விசைகளை வழங்க கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனிடையே, சிபிஐ ரெய்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment