#Breaking : நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடரும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#Breaking : நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடரும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார்.

ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்பின், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து பரிசோதனைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, கருப்பு பூஞ்சை குறித்து ஆராய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 4.20  லட்சம் தடுப்பூசிகள் இன்று வருவதால், நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்.  45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். மாலை சென்னைக்கு வரவுள்ள தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube