#breaking: 60 வயதுக்கு மேல் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி – மத்திய அரசு

அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அனுமதி வழங்கி, முதல்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்