#BREAKING : தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

 இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.