#Breaking : இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல…! உடலில் மாற்றம் தெரிந்தால் பரிசோதனை செய்யுங்கள்….! – சென்னை ஆணையர்

சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை செய்து  கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர்  பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து, மேலும் பல அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள், அசாதாரணமான சூழலில் பணிபுரியும், மாநகராட்சி ஊழியர்களை கேட்கும் கேள்விக்கு  பதிலளியுங்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல.  ஏதேனும் மாற்றம்  தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை செய்து  கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும் என்றும், அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.