#Breaking:ஜூன் 23 அன்று நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே இவை பொருத்தும் – உயர்நீதிமன்றம் கருத்து!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால்,ஓ23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பட்டது.

அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,கடந்த ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்,ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருத்தும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.அதன்பின்னர்,பொதுக்குழு குறித்து மேற்கொண்டு விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Recent Posts

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

1 hour ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

2 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

3 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

5 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

5 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

5 hours ago