30 C
Chennai
Friday, October 22, 2021

#BREAKING: காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே அறிவித்தபடி, நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பெற்றோர்கள் விரும்பினால் மாணவர்களை ஒரு மணி நேரத்தில் கூட வீட்டுக்கு அழைத்து செல்லலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இதனை தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More