#BREAKING: சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்தை திறந்து வைத்த முதல்வர்.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார

சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த ஈரடுக்குபாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை பாலம் கட்டப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று  காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரடுக்கு பாலத்தை திறந்து வைத்து கொடியசைத்து  பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

author avatar
murugan