#BREAKING : நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில்,  நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடாது.

மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக முதல்வர் மிகப் பெரிய அளவிலான திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார். நாங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்து இருந்தோம்.

அதன்படி சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.