27 C
Chennai
Saturday, October 23, 2021

#BREAKING: விஜயதசமி அன்று கோவில் திறப்பு – அரசே முடிவெடுக்கலாம்!

விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.

தமிழகத்தில் விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறோம் என்றும் மருத்துவர் குழுவுடன்  நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் அரசு தரப்பு கூறியுள்ளது. விஜயதசமி அன்று கோவிலைகளை திறக்க கோரி கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,கோயில்களை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More