#BREAKING : தமிழக ஊர்தி நிராகரிப்பு – பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழக ஊர்தி நிராகரிப்பு தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து, தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அந்த கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. வ.உ.சி, பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் படங்கள் அடங்கிய ஊர்தி நிராகரிப்பு ஏமாற்றமளிக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.