#BREAKING: பீகார் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

#BREAKING: பீகார் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம்காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும்வரை பீகாரில் பேரவை தேர்தலை நடத்தக்கூடாது என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. பீகார் தேர்தல் உரிய நேரத்தில் நிச்சயமாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி தெரிவித்திருந்தார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube