#BREAKING: ரேஷன் கடையில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை.

நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கவரும் குடும்ப அட்டைதார்களை அலைக்கழிக்கும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், உணவுப்பொருள் வழங்கும் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நியாயவிலை கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர், இதற்கான உரிய படிவத்தை, அவரால் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரங்களை பதிவு செய்து ரேஷன் கடைகளில் கொடுத்து, அந்த நபரின் வாயிலாக பொருட்களை பெற்று கொள்ளலாம் என ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்