#Shocking:இன்று முதல் பேருந்து,ஆட்டோ,டாக்சி கட்டணம் உயர்வு!

#Shocking:இன்று முதல் பேருந்து,ஆட்டோ,டாக்சி கட்டணம் உயர்வு!

கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-இல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-இல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-இல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.இதுபோன்று, 1.5 கி.மீட்டருக்கான ஆட்டோ கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், 5 கிலோ மீட்டர் வரையில், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.12-இல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்குமேல், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் கட்டணம் ரூ.15-இல் இருந்து ரூ.18 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 1500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200-இல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்படுகிறது.கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.17-இல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது.மேலும், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில்,இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube