, ,
Chandrayaan-3 Mission

#BREAKING: ஸ்மைல் ப்ளீஸ்..விக்ரம் லேண்டரை கிளிக் செய்தது பிரக்யான் ரோவர்..!

By

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்ட இஸ்ரோ, “இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்தது. ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. சந்திரயான்-3 பணிக்கான NavCamகள் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தால் (LEOS) உருவாக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் சல்பர், ஆக்சிஜன் ரோவரில் உள்ள LIBS ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் கண்டறியப்பட்ட நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் ரோவர் உள்ளது. இரும்பு, குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது.